கருக்கலைப்பு செய்ததற்காக சிறைத்தண்டனை பெற்ற பெண்: தீர்ப்பை மாற்றிய மேல்முறையீட்டு மனு
பிரித்தானியாவில், கருக்கலைப்பு செய்த பெண் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு சிறைத்தண்டனை
மூன்று குழந்தைகளுக்குத் தாயான கார்லா (Carla Foster, 44) என்ற பெண், பிரித்தானியாவில் கொரோனா காலகட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தபால் மூலம் கருக்கலைப்பு மாத்திரை பெற்று கருக்கலைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கருக்கலைப்பு செய்தார்.
ஆனால், அந்த கருவை, அல்லது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய விடயம், கார்லாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுத்தந்தது.
அதிரவைக்கும் பின்னணி
அதாவது, இந்த தபால் மூலம் கருக்கலைப்பு மாத்திரை பெற்று கருக்கலைப்பு செய்யும் திட்டத்தின் கீழ், 10 வாரத்துக்கு குறைவான கருவைக் கலைக்கவே அனுமதி உள்ளது.
ஆனால், அந்தக் கருவை சோதித்த மருத்துவர்கள், அது ஒரு ஏழு முதல் எட்டு மாதங்கள் வளர்ந்த குழந்தை என்று கூறியுள்ளார்கள். கார்லா தனது வயிற்றிலிருக்கும் கரு 10 வாரத்துக்கும் குறைவான கரு என்று சொல்லித்தான் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார்.
ஆகவே, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை மாற்றிய மேல் முறையீட்டு மனு
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கார்லா.
தனக்கு ஏற்கனவே மூன்று மகன்கள் இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பமுற்ற கார்லா, வெட்கப்பட்டுக்கொண்டு மருத்துவரிடம் செல்லவில்லை என்றும், அவர் எத்தனை மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார் கார்லா.
தான் கர்ப்பமுற்றிருப்பது குறித்து செவிலியர் ஒருவரிடம் பேசியதாகவும், அவர் தான் கூறிய விவரங்களின் அடிப்படையில் ஏழு வார கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததாகவும் கார்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், கருக்கலைப்பு செய்ய மருந்துகள் அல்லதுப் கருவிகளைப் பயன்படுத்துதல் என்ற குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆகவே, கார்லா சிறையிலிருந்து விடுவிக்கப்பட இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |