17 வயதில் சிறு நிறுவனம் ஒன்றில் இணைந்த பெண்... இன்று ரூ 8500 கோடி சாம்ராஜியமாக மாற்றி சாதனை
குடும்ப தொழிலில் களமிறங்குபவர்கள் எந்த சவாலையும் எதிர்கொள்ள தேவையில்லை என்ற கூற்றை பொய்யாக்கி சாதித்துள்ளார் நதியா சவுகான்.
முறைப்படி, 2003ல்
நதியா சவுகான் பிறந்த அதே 1985ம் ஆண்டில் Parle Agro நிறுவனம் தொடங்கப்பட்டது. சிறு வயதில் இருந்தே நதியா தமது தந்தையுடன் தங்கள் நிறுவனத்திற்கு சென்று பயிற்சிகளை முன்னெடுத்து வந்துள்ளார்.
ஆனால் முறைப்படி, 2003ல் தமது கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் தான் தமது தந்தை பிரகாஷ் சவுகானின் Parle Agro நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது Parle Agro நிறுவனத்தின் வருவாய் என்பது வெறும் ரூ 300 கோடி.
ஆனால் 2017ல் Parle Agro நிறுவனத்தின் வருவாய் என்பது ரூ 4200 கோடி என அசுர வளர்ச்சியை பதிவு செய்தது. 2022- 2023ல் சுமார் ரூ 8,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த அசுர வளர்ச்சிக்கு முதன்மையான காரணம் நதியாவின் கடின உழைப்பு என்றே கூறுகின்றனர்.
நிறுவனத்தில் இணைந்த பின்னர் அவர் முன்னெடுத்த ஆய்வில், தங்கள் நிறுவனத்தின் 95 சதவிகித வருவாய் என்பது ஒரே ஒரு தயாரில் இருந்து மட்டும் ஈட்டப்பட்டு வருகிறது. அந்த தயாரிப்பு Frooti.
ரூ 20,000 கோடி நிறுவனமாக
ஆனால் நதியாவின் கவனம் மொத்தம் வேறு தயாரிப்புகள் மீது திரும்பியது. 2005ல் அவர் Appy Fizz என்ற குளிர் பானத்தை வெளியிட்டார். இந்தியா முழுக்க அது பெரும் வரவேற்பை குறுகிய காலத்தில் பெற்றது.
அத்துடன் அடுத்த தயாரிப்பாக, இந்தியாவில் முதல் முறையாக Nimboo Pani என்ற குளிர் பானத்தை வெளியிட்டார். அதுவும் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. 2015ல் மீண்டும் Frooti குளிர் பானத்தை புதிதாக சந்தைப் படுத்தினார்.
Bailey என்ற பெயரில் குடிநீர் போத்தல்களை விற்பனைக்கு கொண்டுவந்து, ரூ 1,000 கோடி தொழிலாக அதை மாற்றினார். 2030ல் தங்கள் நிறுவனத்தை ரூ 20,000 கோடி நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கையும் நதியா முன்வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |