என்னை கத்தியால் குத்திவிட்டார்கள்... சுவிட்சர்லாந்தில் பொலிசாரை அழைத்த பெண்: பின்னர் நிகழ்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், பெண் ஒருவர் தன்னை யாரோ கத்தியால் குத்திவிட்டதாக பொலிசாரை அழைத்தார்.
நேற்றிரவு நடந்த இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், அந்த பெண்ணின் அழைப்பைத் தொடர்ந்து மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த 30 வயது பெண்ணைக் காப்பாற்ற மருத்துவர்கள் தங்களாலான முயற்சிகளைச் செய்தும், துரதிர்ஷ்டவசமாக அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோக, பொலிசார் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
இந்த கோர சம்பவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகள் யாராவது இருந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.