திருமணம் தாண்டிய உறவு..கூலிப்படை வைத்து கொடூரத்தை அரங்கேற்றிய 25 வயது பெண்
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் இளம்பெண்ணொருவர், திருமணம் தாண்டிய உறவில் இருந்த நபரை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணம் மீறிய உறவு
திருவள்ளூர் மாவட்டம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரியா (25). இவருக்கும் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர்.
ஆனால், கணவருடனான கருத்து வேறுபாட்டினால் பிரியா அவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரியாவிற்கும் பொன்னேரி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (27) என்பவருக்கும் இடையே திருமணம் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆனந்தன் என்பவருடன் பிரியா நெருங்கி பழகியுள்ளார். இந்த விடயம் கோபாலகிருஷ்ணனுக்கு தெரிய வந்ததால் பிரியாவை அவர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
Image source: Vikatan/updatenews360
கொலைத் திட்டம் அரங்கேற்றம்
இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் அடிக்கடி ஆனந்தனுடன் பழக வேண்டாம் என கூறி வந்ததால் அவரை கொலை செய்ய பிரியா திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளை வைத்து கோபாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டிக் கொன்றுள்ளார்.
இதனையடுத்து தலைமறைவான பிரியா, சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் பொன்னேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஆனந்தன் மற்றும் அவரது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணி தொடங்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |