ரூ.1 கோடி சம்பளம் பெறும் வேலையை விட்டு.., ரூ.4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கிய சாதனை பெண்
ரூ.1 கோடி சம்பளம் பெறும் வேலையை விட்டு விட்டு ரூ.4,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
யார் அவர்?
சுகர் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினீதா சிங் (23). இவருக்கு இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்னதாக ரூ.1 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஆனால், அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு தனது கனவை நோக்கி செயல்பட தொடங்கியுள்ளார்.
இவர் தன்னுடைய 10 வயதில் நண்பருடன் இணைந்து சிறு பத்திரிக்கையை தொடங்கி வீடு வீடாக ரூ.3க்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
ஆனால், அப்போது அதனை வாங்க பலரும் மறுத்துள்ளனர். ஆனால், விலை நிர்ணயம் மற்றும் விற்பனை உள்ளிட்ட விடயங்களை அவர் கற்றுக்கொண்டார்.
இவர், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டம் பெற்றார். பின்னர், 23 வயதில் ரூ.1 கோடி சம்பளம் பெறும் அளவிற்கு வேலை கிடைத்தது.
ஆனால், அதனை நிராகரித்துவிட்டு 2015-ஆம் ஆண்டில் இந்தியாவின் அழகு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எண்ணத்தில் சுகர் காஸ்மெட்டிக்சை வினிதா சிங் நிறுவினார்.
உலக அளவில் பல அழகு சாதன பிராண்டுகள் இருந்தாலும் இந்தியாவின் மாறுபட்ட தோல் நிறம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரத்யேகமாக பொருட்களை தயாரித்தார்.
இந்த நிறுவனத்தின் லிப்ஸ்டிக்குகள், ஐலைனர்கள் மற்றும் பல அழகு சாதன பொருட்கள் இந்திய மக்களிடம் பிரபலம் அடைய ஆரம்பித்தது.
இதன் வெற்றிக்கு முக்கிய காரணமே டிஜிட்டல் மற்றும் மார்க்கெட்டிங் தான். பிப்ரவரி 2025 நிலவரப்படி, சுகர் காஸ்மெடிக்ஸின் மதிப்பு ரூ.30 பில்லியன் ஆகும்.
இந்தியாவில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதோடு ஓன்லைன் வணிகத்திலும் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |