பிரான்சைவிட இந்தியா பரவாயில்லை... பிரான்ஸ் நாட்டு இளம்பெண் பட்டியலிடும் ஐந்து விடயங்கள்
பிரான்சைவிட இந்த ஐந்து விடயங்களில் இந்தியா மேல் என்கிறார் பிரான்ஸ் நாட்டு இளம்பெண்ணொருவர்.
அவர் பட்டியலிட்டுள்ள விடயங்கள் என்னென்ன?
Freldaway என்னும் பெயரில் இன்ஸ்டாகிராமில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள,’வேலை விடயமாக இந்தியாவுக்கு வந்துள்ள பிரெஞ்சுப் பெண்’ என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் பெண்ணொருவர், இந்தியாவில் ஐந்து விடயங்கள் பிரான்சைவிட சிறந்ததாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதலாவதாக, தெரு உணவுகள் சுவையிலும், வெரைட்டியிலும் பிரான்சைவிட சிறப்பாக உள்ளதாகக் கூறுகிறார் அவர்.
இரண்டாவதாக, இந்தியாவின் அழகான, வண்ணமயமான நகைகள் மனதைக் கொள்ளையடிப்பதாக தெரிவித்துள்ளார் அவர்.
மூன்றாவதாக, பிரான்சில் நீண்ட தூர பயணங்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் இரவு நேரத்திலும் இயங்கும் AC பேருந்துகளும் ரயில்களும் பிரான்சைவிட வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார் அந்தப் பெண்.
நான்காவதாக, இந்தியப் பெண்கள் தலைமுடியை கவனித்துக்கொள்ள பயன்படுத்தும் எண்ணெய் முதலான விடயங்கள் தன்னை ஆச்சரியப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார் அவர்.
கடைசியாக, இந்தியாவின் விருந்தோம்பலைப் பெரிதும் புகழும் அவர், பரிசாக இந்திய உணவைக் கொடுப்பதையும், இந்தியக் கலாச்சாரத்தையும் பார்க்கும்போது, தான் இந்தியாவில் தொடர்ச்சியாக வரவேற்கப்படுவதுபோல் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்.
அத்துடன் நிற்காமல், பிரெஞ்சு மக்களும் இந்தியர்களைப்போல வெளிநாட்டவர்களை அன்பு மற்றும் திறந்த மனதுடன் வரவேற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார் அவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |