ரூ 750 கோடி மதிப்பு மாளிகையில் வசிக்கும் பெண்... அவர் கணவரின் சொத்து மதிப்பு ரூ 1.36 லட்சம் கோடி
இந்தியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளரும் நன்கொடையாளருமான நடாஷா பூனவல்லா Serum நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அதார் பூனவல்லாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதார் பூனவல்லா
Serum நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் நடாஷா, வில்லூ பூனவல்லா அறக்கட்டளையின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். குறித்த அறக்கட்டளையானது இந்தியாவில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் பிறந்து வளர்ந்த நடாஷா, கோவாவில் ஒரு புத்தாண்டு விருந்து ஒன்றில் வைத்தே முதல் முறையாக அதார் பூனவல்லாவை சந்தித்துள்ளார். ஆனால் அந்த சந்திப்பு பின்னர் நட்பாக மாறி காதலாகியுள்ளது.
இருவரும் 2006ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு சைரஸ் மற்றும் டேரியஸ் என இரு மகன்கள் உள்ளனர். நடாஷா தனது பள்ளிப் படிப்பை புனேவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் முடித்தார், அதற்கு பிறகு புனே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். ரூ 750 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான மாளிகையான லிங்கன் ஹவுஸில் பூனவல்லா தம்பதி குடும்பத்தினருடன் வசிக்கின்றனர்.
விலையுயர்ந்த சொத்துக்களில்
இந்த மாளிகையானது 1933ல் வான்கனேர் மகாராஜாவுக்காக பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் கிளாட் பேட்லி வடிவமைத்துள்ளார். அதாரின் தந்தை சைரஸ் பூனவல்லாவால் வாங்கப்படுவதற்கு முன்பு இந்த மாளிகையானது அமெரிக்க அரசாங்கத்திற்கு பல ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
2015ல் சுமார் 934 கோடி ரூபாய் செலவிட்டு சைரஸ் பூனவல்லா இந்த மாளிகையை வாங்கினார். 50,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையில் சுமார் 40 உறுப்பினர்கள் தங்கலாம்.
இந்த மாளிகையானது மும்பையில் அமைந்துள்ள விலையுயர்ந்த சொத்துக்களில் ஒன்றாகும். சைரஸ் பூனவல்லாவின் மொத்த சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது.
அவரது மகன் அதார் பூனவல்லாவின் சொத்து மதிப்பு 16.3 பில்லியன் அமெரிக்க டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 1.36 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |