உலகின் மிகப்பெரிய மாளிகையில் வசிக்கும் பெண்மணி... அவரது கணவரின் சொத்து மதிப்பு
உலகின் மிகப்பெரிய தனியார் குடியிருப்பு மாளிகை என்றால், அனைவருமே லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனை என்றே கூறுவார்கள்.
நான்கு மடங்கு பெரியது
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ரூ 150,00 கோடி மதிப்பிலான மும்பை நகர குடியிருப்பையும் அடையாளப்படுத்துவார்கள். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய தனியார் மாளிகை அல்லது குடியிருப்பு என்பது இந்தியாவின் குஜராத் மாகாணத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை தான்.
இந்த அரண்மனையானது பரோடாவின் கெய்க்வாதுகளுக்கு சொந்தமானது. உண்மையில், பக்கிங்ஹாம் அரண்மனையைவிடவும் நான்கு மடங்கு பெரியது இந்த லக்ஷ்மி விலாஸ் அரண்மனை.
இந்த மாளிகையில் தான் ராதிகராஜே கெய்க்வாத் மற்றும் அவரது கணவர் Samarjitsinh Gaekwad ஆகியோர் வசிக்கின்றனர். முன்னர் பரோடா அரச குடும்பத்து உறுப்பினரான சமர்ஜித்சிங் கெய்க்வாதின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 20,000 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
2002ல் திருமணம்
லக்ஷ்மி விலாஸ் அரண்மனையானது 3,04,92,000 சதுர அடியில் அமைந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை 828,821 சதுர அடியில் அமைந்துள்ளது. மொத்தம் 170 அறைகள் கொண்ட லக்ஷ்மி விலாஸ் அரண்மனையானது 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
அப்போது 180,000 இங்கிலாந்து பவுண்டுகள் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த மாளிகையில் வசித்து வரும் ராதிகராஜே கெய்க்வாதின் தந்தை தமது அரச குடும்பத்து பட்டத்தை துறந்து, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக செயல்பட்டவர்.
ராதிகராஜே 2002ல் லக்ஷ்மி விலாஸ் அரண்மனையில் சமர்ஜித்சிங் கெய்க்வாதுக்கு மனைவியானார். அதன் முன்னர் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்துள்ளார் ராதிகராஜே.
2012ல் பாரம்பரிய விழா முன்னெடுக்கப்பட்டு சமர்ஜித்சிங் கெய்க்வாத் தமது முடி துறந்ததுடன், 2014ல் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்தார். ஆனால் 2017 முதல் அரசியலில் ஈடுபடுவதை மொத்தமாக கைவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |