செல்போனில் Appஐ பதிவிறக்கம் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி! மாயமான 11 லட்சம்..எச்சரிக்கை செய்தி
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்த பெண்ணுடைய வங்கிக் கணக்கில் ரூ.11 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி அறிக்கையை தேடிய பெண்
மகாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த 40 வயது பெண்ணொருவர், ஆன்லைனில் வங்கி அறிக்கையை (Bank Statement) தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரால் அறிக்கையை எடுக்க முடியவில்லை.
இதனால் இணையத்திலேயே வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்புகொள்ள இணையதளம் ஒன்றை நாடியுள்ளார். அதில் பேசிய நபர்கள் Remote Access மென்பொருளை நிறுவும்படி அறிவுறுத்த, அப்பெண்ணும் அதனை செய்துள்ளார்.
இதன்மூலம் அவர்கள் அவரின் செல்போனை தொலைதூரத்தில் இருந்தே பயன்படுத்த முடியும். குறித்த பெண்ணும் அவ்வாறே செய்துள்ளார்.
மாயமான 11 லட்சம்
அதன் பின்னர் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் ரூபாய் காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்த காவல் ஆய்வாளர், 'குறித்த பெண் போலி வங்கி அதிகாரிகள் என்ன செய்ய சொன்னாரோ அதை சரியாக செய்துள்ளார். மேலும் தனது வங்கிக் கணக்கு சான்றுகளையும் பகிர்ந்துள்ளார். அதன் பின்னர் மோசடி நபர்கள் வங்கியின் இணையதளத்தைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு அறிக்கையைப் பெற முயற்சிக்குமாறு கோரியுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |