சுவிட்சர்லாந்தில் முகப்பருவுக்கு மருந்து எடுத்துக்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
சுவிட்சர்லாந்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் முகப்பருவுக்காக எடுத்துக்கொண்ட மருந்து, அவரது குழந்தைக்கு நிரந்தர பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டது.
கர்ப்பமாக இருந்தபோது முகப்பருவுக்காக மருந்து எடுத்துக்கொண்ட இளம்பெண்
உண்மையில், முகப்பருவுக்கான சிகிச்சையில் இருக்கும்போது அவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்தபோது, அந்த மருந்தின் தாக்கத்தால் அந்த குழந்தை வாய் பேச இயலாததாக இருந்ததுடன், அதற்கு கற்றல் குறைபாடுகள் இருப்பதும் பின்னர் தெரியவந்தது.
ஆகவே, தனக்கு மருந்து பரிந்துரைத்த மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்தார் அந்தப் பெண்.
PHOTO: GETTY
நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
மருத்துவர்கள் அந்த மருந்தின் பக்க விளைவுகள் குறித்துத் தன்னை எச்சரிக்கவில்லை என வாதிட்டார் அந்த இளம்பெண்.
ஆனால், அந்த மருந்தின் பக்க விளைவுகள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவையே ஆகும். ஆகவே, மருத்துவர்கள் தன்னை எச்சரிக்கவில்லை என்ற வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன், அந்த முகப்பருவுக்கான மருந்தை எடுத்துக்கொள்ளும் முன் ஒருவர் கர்ப்பமாக இருக்கிறாரா என பரிசோதனை செய்துகொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒரு விடயம்தான்.
ஆகவே, சுவிஸ் உச்ச நீதிமன்றம் மருத்துவர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது.