20 வருடம் சுய நினைவை தொலைத்த பிரித்தானிய பெண்! ஒரே இரவில் நடந்தது என்ன?
இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் சுமார் 20 வருடங்கள் சுய நினைவை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Essex பகுதியில் வசித்து வருபவர் Claire Muffett-Reece. இவரது கணவர் Scot பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் Jack என்ற மகனும் 9 வயதில் Max என்ற பெண்ணும் உள்ளனர்.
கடந்த 2021-ஆம் ஆண்டில் Claire-க்கு ஜலதோஷம் பிடித்துள்ளது. இந்நிலையில் இரவு தூங்கிய Claire மறுநாள் வரை எழுந்திருக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து Claire சுமார் 16 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் மற்றும் கணவன் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு என்செபாலிடிஸ் நோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சுமார் 16 நாட்கள் கழித்து கண்முழித்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் கூறியதாவது, Claire கண் முழித்த பிறகு தனது 20 வருட நினைவுகளை முற்றிலும் மறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதனை மீட்டு எடுக்கும் முயற்சி செய்து வருவதாகவும் மருத்துவக்குழு கூறியுள்ளது.