தரையில் நேராக மோதிய குழந்தை… டைவ் செய்து காப்பாற்றிய பெண்: வீடியோ
சீனாவில் ஸ்ட்ரோலரில் இருந்து கீழே விழுந்த குழந்தையை பெண் ஒருவர் பாய்ந்து குதித்து காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குழந்தையை காப்பாற்றிய பெண்
சீனாவின் ஹுனான் மாகாணத்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகரமான சாங்ஷாவில் குழந்தையை காப்பாற்றிய பெண் ஒருவரின் துரித செயல் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி கேமரா காட்சிகளில், நடைபாதையின் விளிம்பில் குழந்தையின் இழுபெட்டி ஒன்று கடினமான கான்கிரீட்டில் கவிழ்ந்து கிட்டத்தட்ட தரையில் மோத சரிகிறது.
அப்போது முற்றத்தின் குறுக்கே நிதானமாக நடந்து கொண்டிருந்த பெண், இதனை கவனித்து உடனே ஓடி, கைகளை நீட்டியவாறு இழுபெட்டியை(Stroller) நோக்கி டைவ் செய்தாள்.
நல்லவேளையாக குழந்தை கான்கிரீட்டில் மோதுவதற்கு முன், அந்தப் பெண் குழந்தையை கைகளில் பிடித்தாள், இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை ஆனால் அந்த பெண் தொடர்ந்து தரையில் படுத்துக்கொண்டிருக்க, மற்ற குடும்பத்தினர் குழந்தையை பரிசோதிக்க விரைந்து வந்ததுடன் வீடியோ முடிந்தது.
வைரலான வீடியோ
இதேபோன்று கடந்த ஆண்டு வைரலான வீடியோவில், சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது ஐந்தாவது மாடியின் ஜன்னல் வழியாக விழுந்த இரண்டு வயது சிறுமியை காப்பாற்றினார்.
உயிருக்கு ஆபத்தான விபத்துக்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் இத்தகைய வீரம் மிக்க பார்வையாளர்கள் மற்றும் நல்ல சமாரியர்கள் தேவைப்படும் மக்களைக் காப்பாற்றும் வீடியோக்கள் இணையத்தில் நிறைந்துள்ளன.