துர்நாற்றமடிக்கும் நதியைத் திருமணம் செய்த இளம்பெண்: காரணம் இதுதானாம்
பிரித்தானிய இளம்பெண் ஒருவர், துர்நாற்றம் அடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.
நதியைத் திருமணம் செய்த இளம்பெண்
இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலைச் சேர்ந்த மேகன் ட்ரம்ப் (27)என்னும் இளம்பெண், துர்நாற்றமடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.
சமூக ஆர்வலர்கள் பலர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட அந்த வித்தியாசமான திருமணத்தின் பின்னால் ஒரு நல்ல நோக்கம் உள்ளது.
அவர் திருமணம் செய்துகொண்டது Avon என்னும் நதி. அது, பிரித்தானியாவின் 19ஆவது பெரிய நதி. அந்த நதி பிரிஸ்டல் நகரம் வழியாக ஓடுகிறது.
திருமணம் செய்ததன் காரணம்
மேகன், நீச்சலில் ஆர்வம் கொண்டவர் ஆவார். தங்கள் ஊர் வழியாக ஓடும் அந்த நதி இப்போது இருக்கும் நிலை கண்டு மனம் வருந்தி, தன்னைப்போன்ற எண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஒரு நல்லெண்ணத்துடன் தனது திருமணத்திற்காக மக்களை அவர் அந்த நதிக்கு வரவழைத்துள்ளார்.
சாக்கடை கலந்து ஓடும் அந்த நதியிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக, திருமணத்துக்கு வந்திருந்த பலர் அங்கேயே வாந்தி எடுத்துள்ளனர்.
அந்த அளவுக்கு அந்த நதியின் நிலைமை மோசமாக உள்ளது.
(Image: Instagram/saveouravon)
திருமணம் முடிந்ததும் தான் அந்த நதியின் நலனில் வாழ்நாள் முழுவதும் அக்கறை காட்ட இருப்பதாக தனது திருமண உரையில் மேகன் தெரிவிக்க, திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும், தாங்களும் இனி அந்த நதி மீது அக்கறை செலுத்த இருப்பதாக தெரிவிக்க, மணப்பெண்ணுடைய இலட்சியம் நிறைவேறியுள்ளது.
ஆம், அந்த நதியை சுத்தமாகவேண்டும், இனியும் அதை அசுத்தம் செய்யக்கூடாது என்ற நோக்கில்தான் மேகன் அந்த நதியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இன்னொரு முக்கிய விடயம், Avon நதியைத் திருமணம் செய்துகொண்டதால், தனது பெயருடன் அந்த நதியின் பெயரை மேகன் இணைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |





