இங்கிலாந்தில் படித்த பெண்ணிற்கு இந்திய அமைச்சர் மகனுடன் திருமணம்.., இவரது குடும்ப வணிக மதிப்பு
இங்கிலாந்தின் உயர் பல்கலைக்கழகத்தில் படித்து, மத்திய அமைச்சரின் மகனை மணந்த பெண்ணை பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மூத்த மகன் கார்த்திகே சிங் சவுகான் என்பவர் அமானத் பன்சால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஹரியானாவைச் சேர்ந்த ஒரு முக்கிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அமானத் ஆவார். இவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.
அமானத்தின் குடும்பம் ஹரியானாவைச் சேர்ந்தது. ஆனால், தற்போது டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் வசிக்கிறார்கள். இவரது தந்தை அனுபம் பன்சால் ஒரு தொழிலதிபர் ஆவார்.
அவர் இந்தியாவின் பழமையான ஷூ பிராண்டுகளில் ஒன்றான லிபர்ட்டி ஷூஸ் என்ற காலணி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
அதேபோல இவரது தாயார் ருச்சிதா பன்சால், இந்திய பெண் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் (CWEI) நிறுவனர் ஆவார். மேலும், இஷார் என்ற அமைப்பையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் (எம்எஸ்சி) பெற்றுள்ள அமானத், பரதநாட்டிய நடனக் கலையில் பயிற்சி பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஹரியானாவின் கர்னாலை தளமாகக் கொண்ட லிபர்ட்டி ஷூஸ் (Liberty Shoes), இந்தியாவின் பெரும்பாலான பல நாடுகளிலும் உள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ.950 கோடி என்று கூறப்படுகிறது. மேலும், நிறுவனமானது ஒரு நாளைக்கு சுமார் 60,000 ஜோடி காலணிகளை உற்பத்தி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |