ஸ்விக்கியில் சானிட்டரி பேட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு கிடைத்த ஆச்சரியம்!
ஸ்விக்கியில் சானிட்டரி பேட்களை ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சலில் சாக்லேட் குக்கீஸ் இருப்பதைக் கண்டு ஆச்சரியமைந்தார்.
சமீரா என்ற பெண் ஆன்லைனில் சானிட்டரி பேட்களை ஆர்டர் செய்தபோது ஆச்சரியமடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சானிட்டரி பேட் ஆர்டரில் சாக்லேட் குக்கீஸ்
அவரது பதிவில், "நான் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டிலிருந்து சானிட்டரி பேட்களை ஆர்டர் செய்தேன், அந்தப் பையின் அடிப்பகுதியில் கொஞ்சம் சாக்லேட் குக்கீஸ் இருந்தன. அழகான சிந்தனை! ஆனால் அதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை, ஸ்விக்கியா அல்லது கடைக்காரரா?" என்று சமீரா அதில் எழுதினார்.
சமீராவின் ட்வீட்டுக்கு பதிலளித்த ஸ்விக்கி கேர்ஸ் (Swiggy Cares), ''உங்களுக்கு இனிய நாளாக அமைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், சமீரா" என கூறியது.
சமீராவின் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது, கிட்டத்தட்ட 1,800 லைக்குகளைப் பெற்றுள்ளது.
பல நெட்டிசன்கள் இது பொருளுக்கான விளம்பர பிரச்சாரமாக இருந்திருக்கலாம் என்று கூறினர்.
We just want you to have a pleasant day ahead, Sameera :)
— Swiggy Cares (@SwiggyCares) January 25, 2023
^Ashwin
நெட்டிசன்கள் கருத்து
அதேநேரம், மற்றவர்கள் இதேபோல் தங்கள் ஆர்டர்களுடன் வந்த பொருட்களைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ஒரு பயனர், ''நுகர்வோரை மகிழ்விப்பதற்காகவும், தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காகவும் அவர்கள் அதை வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள். எங்களின் ஆர்டர் மூலம் பலமுறை பிஸ்கட், சாக்லேட், வேஃபர்கள் கிடைத்தன.
மற்றொருவர் எழுதினார், "Instamart அதன் சொந்த கடைகளில் இருந்து சப்ளை செய்கிறது. எனவே நிச்சயமாக இது அவர்களது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும். அதற்காக நீங்கள் swiggyக்கு நன்றி சொல்லலாம்." என்று தெறிவித்தார்.
மூன்றாவது பயனர், ஆன்லைன் டெலிவரி பயன்பாடுகள் குறிப்பிட்ட பிராண்டுகளை இலவசமாக வழங்குவதன் மூலம் விளம்பரப்படுத்துகின்றன. ஒரு ஆட்-ஆன் போன்றது என்று கூறினார்.
பயனர் ஒருவர், இது பெரும்பாலும் அவர்கள் செயல்படுத்திய மாதிரி பிரச்சாரமாக இருக்கலாம். அவர்கள் உங்களுக்கு இந்த தயாரிப்பைக் கொடுத்து அவர்கள் பணம் சம்பாதித்தனர் என்று கூறினார்.
மற்றொருவர், "யாராக இருந்தாலும் சரி, அது ஒரு நல்ல செயல்!!!" என்று பாராட்டினார்.