சிஏ-வை விட்டு வெளியேறி தந்தையின் கனவை நிறைவேற்ற ஐஏஎஸ் அதிகாரியான பெண்
சிஏ-வை விட்டு வெளியேறி தந்தையின் கனவை நிறைவேற்ற பெண் ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியாக மாறியுள்ளார்.
தந்தையின் கனவு நிறைவேற்றம்
மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான Union Civil Services Examination முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரி போன்ற மதிப்புமிக்க பதவிகளில் அரசுப் பணியை பெறுவதற்கு இரவும் பகலுமாக இந்த தேர்வுக்கு தயாராவார்கள்.
இந்திய மாநிலமான ஹரியானா, ஹிசாரைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா கோயல் (25). குஜராத்தின் வதோதராவில் பள்ளிப் படிப்பை முடித்து பரோடாவின் மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார் ஹர்ஷிதா.
இவர் ஒரு பட்டயக் கணக்காளராகத் தகுதி பெற்றார். அறிக்கைகளின்படி, ஹர்ஷிதா தலசீமியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நம்பிக்கை அறக்கட்டளையிலும் பணியாற்றியுள்ளார்.
இவர் 2024 ஆம் ஆண்டு தனது மூன்றாவது முயற்சியிலேயே UPSC தேர்வில் AIR 2-ல் தேர்ச்சி பெற்றார். UPSC-க்கு தனது விருப்பப் பாடமாக அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகளைத் தேர்ந்தெடுத்தார்.
முக்கியமாக CA பட்டம் பெற்ற இவர், தனது தந்தையின் கனவை நிறைவேற்றவே சிவில் சர்வீசஸில் சேர்ந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |