தந்தையின் ஆசையை நிறைவேற்ற மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்
பெண் ஒருவர் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு, UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தந்தையின் ஆசைக்காக
இந்திய மாநிலமான உத்தரகாண்ட், சாமோலி மாவட்டத்தில் உள்ள கர்ணபிரயாக் பகுதியைச் சேர்ந்தவர் முத்ரா கைரோலா.
இவர் சிறு வயதில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்குவதால் 10 ஆம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களையும், 12 ஆம் வகுப்பு தேர்வில் 97 சதவீத மதிப்பெண்களையும் பெற்றார்.
பின்பு, மும்பையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை பல் அறுவை சிகிச்சை (BDS) படிக்கச் சேர்ந்தார். அங்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இதையடுத்து முத்ரா, டெல்லியில் பல் அறுவை சிகிச்சை முதுகலைப் படிப்பில் (MDS) சேர்ந்தார்.
இவரது தந்தை அருண் கைரோலா தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று விரும்பிய நிலையில் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
இதனால் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தனது மருத்துவ படிப்பையும் முத்ரா கொய்ராலா கைவிட்டார்.
பின்னர், முத்ரா கைரோலா 2018 -ம் ஆண்டில் தேர்வெழுதி நேர்காணல் சுற்றுக்கு வந்தார், ஆனால் அவரால் தகுதி பெறவில்லை.
பின்னர், மீண்டும் 2019 -ம் ஆண்டில் மீண்டும் நேர்காணல் சுற்றுக்கு வந்து தோல்வியடைந்தார். ஆனாலும், மூன்றாவது முறையாக 2020-ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற முயன்றார். ஆனால், அதிலும் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, கடினமாக உழைத்து இறுதியாக 2021 -ம் ஆண்டு UPSC தேர்வில் 165 வது ரேங்குடன் தேர்ச்சி பெற்று IPS அதிகாரியானார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |