இவ்வளவு பெரிய வாயா? வாயை பிளந்து காட்டி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இளம்பெண்..
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் வாயை சுமார் 6.52 செ.மீ அளவிற்கு திறந்து காட்டி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கின்னஸ் சாதனையை செய்து வருகின்றனர். தற்பொழுது கின்னஸ் சாதனை தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் அசாத்தியமான செயல்களை கண் இமைக்கும் நேரத்தில் முடித்து கின்னஸ் போன்ற பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சமந்தா என்ற இளம்பெண் வாயை 6.52செ.மீ அளவிற்கு
அகலமாக திறந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரின் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.