20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள்
27 ஆண்டுகால தேடலின் முடிவாக காணாமல் போன பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டு கால தேடலின் பதில்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன போலந்து நாட்டை சேர்ந்த 27 வயது மால்கோர்சாட்டா வ்னுசெக் என்ற பெண்ணின் உடல் எச்சங்களை பிரித்தானியாவின் லெய்செஸ்டர்ஷையரில் காவல்துறை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு நீண்ட நாட்களாக விடை தெரியாமல் இருந்த வழக்கிற்கு முடிவை கொண்டு வந்துள்ளது.
காணாமல் போன மால்கோர்சாட்டா வ்னுசெக் கடைசியாக 2006 ஆண்டு மே 31ம் திகதி சன்னிங்டேல் சாலையில் பீட்டர் ஜாக்சன் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பேருந்து ஏறிய போது கடைசியாக பார்க்கப்பட்டுள்ளார்.
வ்னுசெக்-கின் எச்சங்கள் கிரேட் சென்ட்ரல் வே அருகே உள்ள புதர் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அது வ்னுசெக்கினுடையதா என்பதை இன்னும் உறுதிபடுத்தவில்லை என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |