கனடாவில் இந்திய மூதாட்டியின் காலில் விழுந்து தங்க நகையை கொள்ளையடித்த பெண்: சிசிடிவி காட்சிகள்
Woman Robs Gold From Old Indian Woman in Canada: கனடாவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த மூதாட்டியிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்குவது போல் தங்க நகையை பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை திருடிய பெண்
கனடாவின் பிராம்ப்டன் நகரில் 78 வயதான இந்திய வம்சாவளி மூதாட்டி ஒருவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவருக்கு அருகே கார் ஒன்று வந்து நின்றுள்ளது.
அந்த காரில் இருந்து இறங்கிய பெண், நேராக மூதாட்டியின் கால்களை தொட்டு வணங்கி பின்னர் அவரை கட்டி பிடித்துள்ளார்.
ஆங்கிலம் சரமாக பேசிய தெரியததால், அந்த பெண்ணை தங்களது பக்கத்து வீட்டுக்காரர் என்று மூதாட்டி நினைத்துள்ளார்.

தன்னை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மூதாட்டி உணர்வதற்குள், காரில் வந்த பெண் மூதாட்டியின் தங்க நெக்லஸை கழற்றி விட்டு, தங்கம் பதிக்கப்பட்ட மற்றொரு நெக்லஸை மூதாட்டிக்கு அணிவித்துள்ளார்.
மேலும் மூதாட்டியின் கைகளில் இருந்த வளையல்களையும் கழட்டி விட்டு அந்த பெண் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவமானது ஜூலை 28ம் திகதி நடைபெற்றுள்ளது. ஆனால் டொராண்டோ நகர பொலிஸார் சிசிடிவி காட்சிகளை தற்போது வெளியிட்ட பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
78-YEAR-OLD BRAMPTON WOMAN FOOLED by THIEF who PRETENDS TO BEFRIEND HER
— RT (@RT_com) September 26, 2026
WOMAN TOUCHES HER FEET and HUGS VICTIM before MAKING THE SWITCH
FAKE JEWELLERY placed around her neck as REAL GOLD NECKLACE is STOLEN
$20,000 IN JEWELLERY TAKEN pic.twitter.com/giz5oapx4e
தாயின் நிலை குறித்து மகன் கவலை
இந்த சம்பவத்திற்கு பிறகு தன்னுடைய தாய் மிகுந்த மன அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட நடுக்கத்தால் அவரால் நடக்க கூட முடியவில்லை என்றும் மகன் ராகவேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
இதய நோயாளியான தன்னுடைய தாய் இந்த சம்பவம் குறித்து மிகவும் கவலையடைந்தாகவும், ஆனால் அந்த நேரத்தில் தங்கத்தை விட தன்னுடைய தாயின் உயிர் தான் மிகவும் முக்கியமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ராகவேந்திர குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.