படமெடுத்து நின்ற நாகப்பாம்பு., நொடிப்பொழுதில் மகனைக் காப்பாற்றிய தாய்! திடுக்கிடவைக்கும் வீடியோ
கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் இருந்து மகனைக் காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
வேகமான சிந்தனையுடன் செயல்பட்டு நொடிப்பொழுதில் மகனை பாம்பிடமிருந்து இழுத்த பெண்ணை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
கர்நாடகாவின் மாண்டியாவில் உள்ள ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ள இந்த விடியோவை சமூக ஊடகப் பயனர்கள் பல்வேறு தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்தப் பெண் தன் மகன் பாம்பின் மீது காலடி வைப்பதற்குள், சிறிது நேரத்தில் அவனை இழுத்துச் சென்றார். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது.
வீடியோ தொடங்கும் போது, அந்தப் பெண்ணும் அவரது மகனும் பாம்பு ஒன்று குறுக்கே செல்வதை அறியாமல் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதைக் காணலாம். பாம்பு வீட்டிற்கு வெளியே படிக்கட்டுக்கு மிக அருகில் சென்றதால், அவர்கள் பாம்பை கவனிக்கவில்லை. நாகமும் மனிதர்கள் நடமாட்டத்தை உணரவில்லை.
சிறுவன் படியைக் கடக்கும்போது பாம்பு பட்டென எழுந்து தற்காப்புக்காக படமெடுத்து நின்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சியில் அப்பெண் அங்கிருந்தது பக்கவாட்டில் தாவி மகனிடம் செல்கிறார். ஆனால் நடப்பது புரியாமல், சிறுவன் பயந்து, பாம்பின் மீதே குதித்து வீட்டிற்குள் ஓட முயற்சிக்கிறான். அப்போதுதான் அந்தப் பெண், சட்டென செயல்பட்டு மகனை இழுத்து தூக்கிக்கொள்கிறார். அவர் இழுக்காமல் இருந்தால், தற்காப்புக்காக நாகம் சிறுவனை தாக்கியிருக்கலாம்.
Her presence of mind saved the kid..
— Anu Satheesh ?? (@AnuSatheesh5) August 12, 2022
Mother ❤️
But be safe all, this is an eye opener to all pic.twitter.com/tPm6WbGc8g
ஆனால், அப்பெண் மகனை அங்கிருந்து தோளில் தூக்கிக் கொண்டு பாதுகாப்பாக நகர்ந்துவிட, பாம்பும் விலகிச் சென்றது.
இந்த வீடியோ வைரலாகிவர, அந்த பெண்ணின் துணிச்சலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.