சாலையோரமாக கிடந்த தலையணை உறைகள் அசைவதைக் கண்ட பெண்: தெரியவந்த அதிரவைக்கும் விடயம்
பிரித்தானியாவில் சாலையோரமாக கிடந்த தலையணை உறைகள் இரண்டு அசைவதைக் கண்ட குப்பை எடுக்கும் பெண் ஒருவர், பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
நம்ப மறுத்த உள்ளூர் கடைக்காரர்
பிரித்தானியாவிலுள்ள Hucclecote என்ற இடத்தில் வாழும் மரியா (Maria Clutterbuck, 54) என்னும் பெண், குப்பை எடுக்கும் வேலை செய்பவராவார்.
Image: Maria Clutterbuck / SWNS
புனித வெள்ளியன்று, வழக்கம் போல அவர் குப்பை எடுக்கச் செல்லும்போது, ஓரிடத்தின் இரண்டு மூட்டைகள் கிடப்பதைக் கவனித்துள்ளார்.
Image: Maria Clutterbuck / SWNS
பின்னர் அவை அசைவதைக் கவனித்த அவர், அந்த மூட்டைகளை காலால் லேசாக அசைக்க, அவற்றிற்குள்ளிருந்து சீறும் சத்தம் போல் கேட்க, அவை பாம்புகளாக இருக்கக் கூடும் என்று எண்ணி, உள்ளூர் பாம்புகள் விற்பனையாளர்களை அழைத்துள்ளார்.
ஆனால், அவர்கள் மரியாவை நம்பவில்லையாம்.
பொலிசாரை அழைத்த மரியா
ஆகவே, அடுத்தபடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார் மரியா. அவர்கள் வந்து அந்த பைகளை சோதனையிட்டுள்ளார்கள். அவர்களும் மரியா சொன்னதை சந்தேகித்துள்ளார்கள்.
Image: Maria Clutterbuck / SWNS
பெண் பொலிசார் ஒருவர் அந்த தலையணை உறையைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க, உள்ளேயிருந்து இரண்டு மலைப்பாம்புகள் சீறியுள்ளன. மலைப்பாம்பைக் கண்ட அந்த பெண் பொலிசார் பயந்து அலறியுள்ளார்.
Image: Google Street View
பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் யாரோ ஒருவர், இனி அவற்றை வளர்கமுடியாது என்று எண்ணி, அவற்றை தலையணை உறைகளுக்குள் அடைத்து தெருவோரமாக போட்டுச் சென்றிருக்கலாம் என கருதுகிறார் மரியா.
இரண்டு தலையணை உறைகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த நான்கு மலைப்பாம்புகளை பொலிசார் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
Image: Maria Clutterbuck / SWNS