பிரித்தானிய ராணி கமீலாவின் கணவரை ரகசியமாகக் காதலிக்கும் பெண் இவர் தான்
பிரித்தானிய ராஜ குடும்பத்தினரின் காதல் கதைகள் உலகமெங்கும் பிரசித்தம். காதலிக்காக அரியணையைத் துறந்த எட்டாம் எட்வர்ட் மன்னர் முதல், சமீபத்தில் மனைவிக்காக பிரித்தானியாவையே விட்டு வெளியேறிய இளவரசர் ஹரி வரை.
இளவரசர் சார்லசைக் காதலித்துவிட்டு ஆண்ட்ரூ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட கமீலா, கடமைக்கு டயானாவைத் திருமணம் செய்துகொண்டு, மீண்டும் காதலியுடன் முந்தைய காதலை சட்டவிரோதமாக தொடர்ந்த இளவரசர் சார்லஸ் என சொல்லிக்கொண்டே போகலாம்.
GETTY IMAGES
ஒரே காதல் ஊரில் இல்லையடா
ஆக, சாகும் வரை மேலை நாட்டவர்களுக்கு புதிது புதிதாக காதல் வந்துகொண்டேஇருக்கும்போலிருக்கிறது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாடல் ஒன்றில் கமலஹாசன் பாடுவதுபோல, காதல் போயின் சாதலா, இன்னொரு காதல் இல்லையா, ஒரே காதல் ஊரில் இல்லையடா என்பதுதான் மேலைநாடுகளில் காதல் கொள்கை போலும்.
The Royal Family
அதுமட்டுமில்லை, காதலிக்க ஆளும் பார்க்கவேண்டாம் வயதும் பார்க்கவேண்டாம், அப்பா வயது, அம்மா வயது நபர்களை காதலிப்பவர்கள், அம்மாவின் முன்னாள் கணவரையே காதலிக்கும் பெண்கள், தான் விவாகரத்து செய்வபவரையே மீண்டும் காதலிப்பவர்கள் என மேலைநாட்டு செய்திகளைப் பார்த்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது.
ராணி கமீலாவின் கணவரைக் காதலிக்கும் பெண்
அவ்வகையில், ராணி கமீலாவின் முந்தைய கணவரை காதலிக்கும் ஒரு பெண்ணைக் குறித்த ஒரு ரகசிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி பிரபலமான ஆனி ராபின்சன் (Anne Robinson, 79) என்பவரைத்தான் காதலிக்கிறாராம் ராணி கமீலாவின் முன்னாள் கணவரான ஆண்ட்ரூ பார்க்கர் (Andrew Parker Bowles, 83).
Image: Shutterstock
மேலும், இருவரும் காதலிப்பது ராணி கமீலாவுக்கும் சம்மதம் என்றும், ஓராண்டுக்கும் மேலாக இருவரும் காதலித்துவருவதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனியும் ஏற்கனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தானவர்தான். 1968ஆம் ஆண்டு Charles Wilson என்பவரைத் திருமணம் செய்து, இருவரும் 1973இல் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். அப்போதுதான் கமீலாவுக்கும் ஆண்ட்ரூவுக்கும் திருமணமானது.
பின்னர், 1980ஆம் ஆண்டு ஆனி, John Penrose என்பவரை இரண்டாவதாக திருமண செய்துகொண்டார். இருவரும் 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். அதற்குப் பிறகு இப்போது ஆனிக்கு ராணி கமீலாவின் முன்னாள் கணவர் மீது காதல் வந்திருக்கிறதாம்!
Image: CHANNEL 4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |