பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்: விசாரணையில் பொலிஸாருக்கு கிடைத்த அதிர்ச்சி
பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாயை டேராடூன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெற்ற மகளை 1.5 லட்சத்துக்கு விற்ற தாய்
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் சிறுமி கடத்தப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், தாய் உட்பட 4 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் சகஸ்தரதார ரோட்டை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தன்னுடைய 15 வயது மகளை காணவில்லை என்று ராஜ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தாய் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 137(2)-ன் கீழ் பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் போது அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, பெற்ற தாயே தன்னுடைய மகளை ரூ1.5 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறுமியை வாங்கியவரிடம் இருந்து முழு தொகையையும் பெற முடியதாததால் மகளை காணவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கைது நடவடிக்கை
இதையடுத்து தாய் கைது செய்யப்பட்டதுடன் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனிஷ் (37), மற்றும் லிவி குமார்(24) ஆகியோரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதில் இடைத்தரகராக செயல்பட்ட பின்கி மாலிக் என்பவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கும் நோக்கத்தில் கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |