இரத்தத்தை உறிஞ்ச முயன்றாள்! தப்பிய மாமியார்..துணையைக் கொன்ற பெண்ணுக்கு 37 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் சாமுராய் வாளினால் மனைவியை கொன்ற பெண்ணுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சாமுராய் வாளினால் 13 முறை
லாஸ் ஏஞ்சல்ஸின் சான் டிமாஸைச் சேர்ந்தவர் Weichien Huang (45). இவர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி Chen Chen Feiஐ (47) சாமுராய் வாளினால் 13 முறை வெட்டி கொலை செய்தார். 
மேலும், தனது மகளின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்து வந்த Hsi Weiஐயும் கொலை செய்ய முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பிக்க, விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது Huang இந்த கொலையை செய்தது பின்னர் தெரிய வந்தது.
ஒரு காட்டேரியைப் போல
இதனையடுத்து கடந்த 3ஆம் திகதி, தைவானில் உள்ள போமோனா நீதிமன்றத்தில் வீடியோ மூலம் தோன்றிய Hsi Wei, நடந்த சம்பவங்களை அதிர்ச்சியுடன் கூறினார்.
அப்போது அவர், Weichien Huang ஒரு காட்டேரியைப் போல மக்களிடம் இருந்து அதிக இரத்தத்தை உறிஞ்ச முயன்றாள் என்று குறிப்பிட்டார்.
பின்னர் Weichien Huang மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |