மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் வழக்கு: அதிரடி திருப்பம்
பிரான்சில் வாழ்ந்துவரும் ஜேர்மன் பெண் ஒருவர் மொட்டையடிக்கப்பட்டு நிர்வாணமாக 12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பமாக, அந்தப் பெண்ணின் கணவர் பொலிசாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மொட்டையடிக்கப்பட்டு நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்
ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் பொலிசாருக்கு ஜேர்மன் எல்லையிலுள்ள பிரெஞ்சு நகரமான Forbachஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து அவசர உதவி கோரி ஒரு அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய பெண், தான் குடியிருப்பு ஒன்றில் 12 ஆண்டுகளாக அடைத்துவைத்து கொடுமைப்படுத்தப்படுவதாக புகாரளிக்க, உடனடியாக அவர்கள் பிரான்ஸ் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.
CBS News
அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிசார், அங்கு 53 வயதுடைய பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், தலை மொட்டையடிக்கப்பட்டு, திரைச்சீலைகளால் மூடப்பட்ட ஒரு அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
பெண் கூறிய பயங்கர புகார்
தன் கணவர் 2011ஆம் ஆண்டு தன்னைக் கடத்திவந்து அந்த வீட்டில் அடைத்ததாகவும், தன்னை தினமும் வன்புணர்ந்ததாகவும், சித்திரவதை செய்வதாகவும், தன்னை சித்திரவதை செய்வதற்காகவே ஒரு பெட்டியில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் அந்தப் பெண் பொலிசாரிடம் கூறியுள்ளார்.
12 ஆண்டுகளாக தான் அங்கு அடைக்கப்பட்டிருந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை தன் கணவரின் மொபைல் தற்செயலாகக் கிடைத்ததால், தான் பொலிசாரை அழைத்ததாக அவர் கூறியுள்ளார். பொலிசார் அவரது கணவரான 55 வயது நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
வழக்கில் அதிரடி திருப்பம்
ஆனால், பொலிஸ் விசாரணையில் அந்தப் பெண் கூறிய புகார்கள் எதற்கும் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. மருத்துவப் பரிசோதனையில் அவர் வன்புணரப்பட்டதற்கான ஆதாரங்களோ, சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களோ அவரது உடலில் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
JEAN-CHRISTOPHE VERHAEGEN/AFP VIA GETTY IMAGES
அந்தப் பெண் ஒரு அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவரது கணவர், அதனால் அவர் படுத்த படுக்கையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஜேர்மானியர்களான அந்த தம்பதியருக்கு பிரெஞ்சு மொழி தெரியாததாலும், மருத்துவக் காப்பீடு இல்லாததாலும் அவர் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர் பட்டினி போடப்படவும் இல்லை, அவரது நோய் காரணமாகவே அவரது தலை முடி கொட்டியுள்ளது, அவர் மொட்டையடிக்கப்படவும் இல்லை.
இவ்வளவு விவரங்களும் தெரியவந்ததையடுத்து அந்தப் பெண்ணின் கணவரை பொலிசார் விடுவித்துள்ளனர். அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.
அந்தப் பெண்ணுக்கு நல்ல மருத்துவ உதவி வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |