பள்ளிக்குச் சென்றபோது தாலிபான்களால் சுடப்பட்ட பெண்... இன்று அவர் செய்துள்ள சாதனை
பாகிஸ்தானில் வாழும்போது, பள்ளிக்குச் சென்றபோது தலையில் தாலிபான்களால் சுடப்பட்ட, மலாலா, இன்று பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுவிட்டார் என்பது தெரிந்தால், தாலிபான்கள் அதற்கு எப்படி ரியாக்ட் செய்வார்களோ தெரியாது.
Malala Yousafzaiக்கு 15 வயது இருக்கும்போது, தன் சொந்த நாடான பாகிஸ்தானில் அவர் பெண் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால், அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டார்கள் தாலிபான்கள். சிகிச்சைக்குப்பின் ஆச்சரியத்துக்குரியவிதமாக உயிர் பிழைத்த Malala, பிரித்தானியாவுக்கு சென்று அங்கும் தன் பணியைத் தொடர்ந்தார். அதன் பலனாக, 2014ஆம் ஆண்டு, அவரது 17 வயதில், மிகவும் சிறிய வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

இன்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தத்துவஇயல், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவராக நிற்கிறார் Malala.
இன்ஸ்டாகிராமில் தனது பட்டமளிப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர்.
அவர் வெளியிட்ட இடுகை, 600,000 லைக்குகளைப் பெற்றுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.
ஆனாலும், தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் இன்றும் பெண் பிள்ளைகள் உயர்பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுதான் சோகம்.



 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        