வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் செய்த செயல்: கொலையில் முடிந்த சம்பவம்
கடந்த ஆண்டு, ஒரு நாள் இரவு, தன் வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்ட வீட்டு உரிமையாளர் செய்த செயல், அவரை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளது.
வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர்
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு, நியூயார்க்கில், கெவின் (Kevin Monahan, 66) என்பவர் தனது வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்டுள்ளார்.
Washington County Sheriff's Office
யாரோ சிலர் தன் வீட்டை சுற்றிவளைக்க வந்துள்ளதாக தான் கருதியதாக தெரிவிக்கும் கெவின், வாகனங்களைக் கண்டு தன் மனைவி ஓரிடத்தில் பதுங்கிக்கொண்டதாகவும், தன் மனைவிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று என்ணி, தான் தன்னிடம் ஆயுதம் உள்ளது என்பதைக் காட்டுவதற்காக தனது துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கிறார்.
ஆனால், தவறுதலாக தன் கைபட்டு இரண்டாவது முறையும் துப்பாக்கி வெடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார் கெவின்.
எதிர் தரப்பின் வாதம்
ஆனால், கெவின் இரண்டாவது முறை சுட்டபோது, வாகனம் ஒன்றிலிருந்த கெய்லின் (Kaylin Gillis, 20) என்ற இளம்பெண்ணின் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்துவிட்டார்.
Courtesy Schuylerville Varsity Cheerleading
அரசு தரப்பில், கெவின் வீட்டுக்குள் வாகனங்கள் நுழைந்தது உண்மைதான் என்றும், ஆனால், கெய்லினுடைய நண்பர் ஒருவர் வீட்டுக்குள் நுழைவதற்கு பதிலாக, தவறுதலாக கெவின் வீட்டுக்குள் அந்த வாகனங்கள் நுழைந்துவிட்டன என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனத்தில் இருந்த யாரும் கீழே இறங்கவில்லை என்றும், கெவினுடன் விவாதத்தில் ஈடுபடவில்லை என்றும் எதிர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி விவாதங்கள் திங்கட்கிழமை நடைபெற உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |