பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: யாருமின்றி உயிரிழந்த மூதாட்டி
பெங்களூருவில் வீடு ஒன்றில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு
பெங்களூருவின் பகலகும்டே(Bagalagunte) பகுதியில் ஹவானூர் லேஅவுட் என்ற இடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 52 வயது வயது பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தாக்ஷாயிணி என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்த பெண், உயிரிழந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்ஷாயிணி உடல் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே கிடந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குடும்ப பின்னணி
மகன் மற்றும் கணவன் உயிரிழந்த பிறகு தாக்ஷாயிணி தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
மகன் மற்றும் கணவனின் மறைவுக்கு பிறகு தாக்ஷாயிணி மிகுந்த மன அழுத்தத்தில் அவதியடைந்து வந்தாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்ஷாயிணியின் கணவர் 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார், அவரது மகனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தாக்ஷாயிணியின் மகளும், மருமகனும் இந்த காலக்கட்டத்தில் இங்கு வந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |