பறக்கும் விமானத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பெண்மணி: இறுதியில் தெரியவந்த பகீர் உண்மை
லண்டனில் இருந்து நைஸ் நகருக்கு புறப்பட்ட விமானத்தில், ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதப்பட்ட பெண்மணி, உண்மையில் இறந்து போயிருந்த சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சலனமும் இன்றி காணப்பட்ட பெண்மணி
லண்டனில் இருந்து பிரான்சின் நைஸ் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் பயணித்த 73 வயதான அந்த பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவே கூறப்படுகிறது.
நைஸ் நகரில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து அனைவரும் தங்கள் பெட்டிகளுடன் வெளியேற வரிசையில் காத்திருக்கும் போது, குறித்த பெண்மணி மட்டும் எந்த சலனமும் இன்றி காணப்பட்டுள்ளார்.
அவர் தூக்கத்தில் இருப்பதாகவே சக பயணிகளும் கருதியுள்ளனர். ஆனால் சக பயணிகள் அவரை எழுப்ப முயன்று, முடியாமல் போக, பயந்து போன பயணிகள் விமான ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கவும், அவர்கள் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விமான பயணத்தினிடையே மரணம்
இதனையடுத்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் மீட்புக்குழுவினர் விமானத்தில் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் முயற்சியும் தோல்வியில் முடிய, உள்ளூர் நேரப்படி, இரவு 10 மணியளவில் தொடர்புடைய பெண்மணி இறந்துள்ளதை உறுதி செய்தனர்.
@shutterstock
அந்த பெண்மணி குறித்து வேறு தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விமான பயணத்தினிடையே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பத்திரிகை வெளியிட்ட தகவலில், மரணமடைந்த பெண்மணி பிரித்தானியர் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அதை உறுதி செய்யவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |