இந்திய அணிக்கு தரமான பதிலடி கொடுத்த இலங்கை! அடித்து நொறுக்கிய இருவர்
மகளிர் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சமரி அதப்பத்து, சுகந்திகா குமாரி
கொழும்பில் நடந்த முத்தரப்பு மகளிர் ஒருநாள் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 275 ஓட்டங்கள் எடுத்தது.
ரிச்சா கோஷ் (Richa Ghosh) 58 (48) ஓட்டங்களும், ஜெமிமா ரோட்ரிகஸ் 37 (46) ஓட்டங்களும் விளாசினர். இலங்கை தரப்பில் சமரி அதப்பத்து, சுகந்திகா குமாரி தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பாரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் ஹாசினி பெரேரா 22 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்ஷிதா சமரவிக்ரமா, விஷ்மி குணரத்னே உடன் கைகோர்த்து மிரட்டினார்.
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. விஷ்மி குணரத்னே 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த ஹர்ஷிதா 53 (61) ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பின்னர் அணித்தலைவர் சமரி அதப்பத்து 23 ஓட்டங்களும், கவிஷா தில்ஹரி 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
நிலக்ஷி டி சில்வா அதிரடி
அதிரடியில் மிரட்டிய நிலக்ஷி டி சில்வா 33 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய அனுஷ்கா சஞ்சீவனி (23) மற்றும் சுகந்திகா குமாரி இருவரும் (19) ஆட்டமிழக்காமல் வெற்றியை நிலைநாட்டினர்.
இலங்கை அணி 49.1 ஓவரில் 278 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணியை பழிதீர்த்தது.
Fearless and Victorious – Sri Lanka Women Stun India by 3 Wickets! 🇱🇰#SLvsIND #SriLankaCricket #ServoCup2025 pic.twitter.com/pCCBTipSzo
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) May 4, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |