முதல் முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்த இலங்கை! கதகளி ஆடிய கேப்டன்
மகளிர் இலங்கை அணி முதல் முறையாக ஆசியக்கிண்ணத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை ஆடியது. முதலில் ஆடிய இந்திய அணி 165 ஓட்டங்கள் எடுத்தது. மந்தனா 60 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
Chamari Athapaththu strikes as India look to rebuild inning.
— Female Cricket (@imfemalecricket) July 28, 2024
Uma Chetry departs for 9(7).
India: 58/2 (8.1)#CricketTwitter #WomensAsiaCup2024 #SLvIND pic.twitter.com/fA4asd01bF
பின்னர் ஆடிய இலங்கை அணியில் கேப்டன் சமரி அதப்பத்து ருத்ர தாண்டமாடினார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 61 ஓட்டங்கள் குவித்து வெளியேற, ஹர்ஷிதா சமரவிக்ரமாக அதிரடியில் மிரட்டினார்.
அவர் 51 பந்துகளில் 69 ஓட்டங்கள் விளாச, கவிஷா தில்ஹாரி சிக்ஸர் அடித்து இலக்கை 19வது ஓவரிலேயே எட்ட வைத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாயசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஆசியக்கிண்ண மகுடம் சூடியது.
🏆 CHAMPIONS!! 🏆
— Female Cricket (@imfemalecricket) July 28, 2024
1st ever Women's Asia Cup title for Sri Lanka Women 🫡 #CricketTwitter #WomensAsiaCup2024 #SLvIND pic.twitter.com/boIugeNI8m