கேரளாவில் அரங்கேறிய பயங்கரம்..மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணை குத்திக்கொன்ற நபர்
இந்திய மாநிலம் கேரளாவில் நபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பெண்ணொருவரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியால் குத்திக்கொலை
எர்ணாகுளம் மாவட்டம் முவட்டுபுலா பகுதியைச் சேர்ந்த பெண் சிம்னா சகீர் (35). இவரது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பார்த்துக் கொண்ட சிம்னா, நேற்று மாலை 3 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஷாகுல் அலி (37) என்ற நபர் திடீரென சிம்னா சகீரின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சிம்னா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
லேசான காயங்களுடன் கைது
இதனையடுத்து ஷாகுல் அலி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். அதற்கு அவர் மீட்கப்பட்டு லேசான காயங்களுடன் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் ஷாகுல் அலியும், சிம்னாவும் நன்கு பழகி வந்ததும், காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |