பிரித்தானியாவில் பெண்ணுக்கு கத்திக்குத்து: தாக்குதல்தாரியை சுட்டு வீழ்த்திய பொலிஸார்
Woman Stabbed in Luton Man Was Shot By Police: பிரித்தானியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.
கத்தியை காட்டி பெண்ணை மிரட்டிய நபர்
பிரித்தானியாவின் லூட்டன் நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெண் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார்.
கார்டிகன் தெருவில் பிற்பகல் 12.50 மணிக்கு தாக்குதல்தாரி ஒருவர் கத்தியை காட்டி பெண் ஒருவரை மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தாக்குதல்தாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சம்பவத்தில், பொலிஸாரால் சுடப்பட்ட நபர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையை தொடங்கிய IOPC
பொலிஸார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதா, தாக்குதல்தாரி மீது பயன்படுத்தப்பட்ட பலம் நியாயமானதா என்பது குறித்து சுதந்திரமான காவல்துறை ஒழுங்குமுறை குழு(IOPC) விசாரணையை நடத்தி வருகிறது.
IOPC தகவலில், இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் 4 சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டு இருப்பதாகவும், மற்றொரு அதிகாரி லத்தியால் அடிக்கக்கூடிய ரவுண்டை பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில், காவல்துறை அதிகாரிகள் எந்தவொரு குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது தொழில்முறை தரங்களை மீறியதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |