2 வாடகை கணினிகளுடன் தொடங்கிய நிறுவனம்... இன்று ஆண்டு வருமானம் பல கோடிகள்
மேற்கு வங்கத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இன்று ஆண்டுக்கு பல கோடிகள் வருவாய் ஈட்டும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பெண் ஒருவர்.
ஆண்ட்ராய்டு செயலிகளை உருவாக்க
மேற்கு வங்கத்தின் Bardhaman பகுதியில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தார் Aunkita Nandi. வங்காளி மொழியிலேயே பாடசாலை கல்வியை முடித்துள்ளார். பின்னர் கணினி பொறியியல் பட்டப்படிப்பு.
கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து ஆண்ட்ராய்டு செயலிகளை உருவாக்கத் தொடங்கியுள்ளார். செயலிகளை விற்பனை செய்து அதிலிருந்து வருவாய் ஈட்டவும் தொடங்கினார்.
இந்த நிலையில் தான், சொந்தமாக நிறுவனம் ஒன்றை உருவாக்கும் திட்டத்துடன் செயல்பட தொடங்கினார். அப்போது டேட்டிங் செயலி ஊடாக அமெரிக்காவின் புளோரிடாவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் ஜான் வான் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
25க்கும் மேற்பட்ட மென்பொருள்
அவருடன் இணைந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றை துவங்கும் திட்டத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 2015ல் இருவரும் இணைந்து 2 வாடகை கணினிகளுடன் Tier 5 என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
2021ல் இந்த நிறுவனமானது ரூ 100 கோடி அளவுக்கு வர்த்தகம் முன்னெடுத்துள்ளது. தற்போது இவரது Tier 5 நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கொல்கத்தாவிலும் இவர்களுக்கு கிளை உள்ளது. 1500 பேர்களுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். Tier 5 நிறுவனம் இதுவரை 25க்கும் மேற்பட்ட மென்பொருள் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமது கனவுகள் மெய்ப்பட உதவிய ஜான் வான் என்பவரையே 2021ல் Aunkita Nandi திருமணம் செய்துகொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |