ரூ 20,000 முதலீட்டில் பெண் ஒருவர் தொடங்கிய வணிகம்... இன்று அதன் மதிப்பு ரூ 4500 கோடி
சுய நம்பிக்கை பெரும்பாலும் வெற்றிக்கான மிக முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. உலகம் உங்களை நம்பவில்லை என்றாலும், உங்களை எதுவும் வீழ்த்த முடியாது, குறிப்பாக அழிக்க முடியாத தன்னம்பிக்கை வரும்போது.
தாயாரால் ஈர்க்கப்பட்டார்
வந்தனா லூத்ராவின் ஊக்கமளிக்கும் பயணமும் இந்தக் கொள்கையை வரையறுக்கிறது. தற்போது வந்தனாவின் சொத்து மதிப்பு ரூ 1,300 கோடி. தமது கனவு திட்டத்தை செயல்படுத்த வெறும் 20,000 ரூபாய் முதலீடு செய்தார்.
அந்த நிறுவனம் மக்களின் மதிப்பினைப் பெற்றதன் பின்னர் ரூ 2,500 கோடிக்கு அவர் விற்பனை செய்தார். தற்போதும் அந்த நிறுவனத்தின் பங்குகளை கைவசம் வைத்திருக்கிறார்.
ஏழைகளுக்கு உதவி செய்யும் அமர் ஜோதி என்ற ஆயுர்வேத தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த அவரது தாயாரால் வந்தனா ஈர்க்கப்பட்டார். மக்கள் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த வேலைகளை எல்லாம் பார்த்த வந்தனா, மக்களின் வாழ்க்கையிலும் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார்.
இந்தியாவில் ஊட்டச்சத்து மற்றும் அழகுசாதனவியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாததைக் கண்டு, ஜேர்மனியில் இரு துறைகளிலும் தனது உயர் படிப்பைத் தொடர முடிவு செய்தார்.
பட்டம் பெற்ற பிறகு, இந்தியா திரும்பிய வந்தனா ரூ 20,000 முதலீட்டில் தனது கனவு திட்டத்தை தொடங்கினார். 1989ல் புது டெல்லியில் VLCC என்ற நிறுவனம் உருவானது. 2000 ஆண்டில் தான் VLCC நிறுவனம் ரூ 50 கோடி வருவாயை எட்டியது.
திருமணத்தால் வங்கி ஊழியர் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்... நிறுவனத்தின் மதிப்பு ரூ 190,512 கோடி
2005ல் VLCC நிறுவனத்திற்கு திருப்புமுனையாக Jassi Jaisi Koi Nahi என்ற தொலைக்காட்சி தொடர் அமைந்தது. 2009ல் VLCC நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 125 கோடியை தொட்டது.
10,000 பெண்களுக்கு பயிற்சி
2010ல் நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட கிளைகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலும் கிளைகளை திறந்தார். தற்போது VLCC நிறுவனம் 311 மையங்களை கொண்டுள்ளது.
100 பயிற்சி மையங்கள் மற்றும் நாடு முழுவதும் 144 நகரங்களில் VLCC செயல்பட்டு வருகிறது. Carlyle குழுமம் சுமார் ரூ 2500 கோடிக்கு VLCC நிறுவனத்தை வாங்கியுள்ளது.
வெளியான தரவுகளின் அடிப்படையில் VLCC நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ 986 கோடி என கூறப்படுகிறது. மட்டுமின்றி, நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ 4,500 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், VLCC நிறுவனம் 10,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறது, VLCC மையங்களில் 70 சதவிகிதம் பெண்களே வேலை செய்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |