சத்தான உணவுக்கு Snacks Business தொடங்கிய பெண்.., நிறுவன மதிப்பு எவ்வளவு தெரியுமா?
உடல் ஆரோக்கியத்திற்காக Snacks Business தொடங்கிய பெண் ஒருவரின் நிறுவனம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது.
யார் அவர்?
இந்திய மாநிலமான ராஜஸ்தான், பரத்பூரைச் சேர்ந்தவர் அஹானா கௌதம் (Ahana Gautam). இவர் IIT பாம்பேயில் Chemical Engineering பட்டம் பெற்றார். பின்னர், 2014 மற்றும் 2016 க்கு இடையில் Harvard Business ஸ்கூலில் MBA முடித்தார்.
ஒரு நாள் Ahana Gautam, அமெரிக்க ஹொட்டலில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு மற்றும் க்ரீம் நிறைந்த உணவுகளை பார்த்து சலித்து விட்டார். ஆரோக்கியமான உணவுகள் கிடைக்காததால் அவரே உணவு தயாரித்து சாப்பிட தொடங்கினார்.
பின்னர், சத்தான தின்பண்டங்களை தயாரித்து விற்கும் நிறுவனத்தை அஹானா தொடங்கினார். இவரின் நிறுவனத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்கள் கிடைப்பதால் மக்களுக்கு சீக்கிரமே இவரது பொருட்கள் பிடித்துவிட்டது.
இவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் ஓபன் சீக்ரெட் (Open Secret). தற்போது பலரும் ஆரோக்கியமான உணவுகளை வைத்து வணிகம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் விரைவில் வெற்றி பெற முடிவதில்லை.
ஆனால், அஹானா கௌதமின் தயாரிப்புகள் சுவையையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருந்ததால் வியாபாரம் நன்றாக சென்றது.
ரூ.100 கோடி
Open Secret நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் Ahana Gautam உள்ளார். இவர் தனது சொந்த தொழிலை தொடங்கும் முன்பு அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் பணியில் இருந்தார்.
இவருக்கு , 2019 -ம் ஆண்டில் தொழிலைத் தொடங்குவதற்கு தேவையான ஆரம்பப் பணத்தை தாயார் வழங்கியுள்ளார். தற்போது இவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ.100 கோடியை எட்டியுள்ளது.
செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றில் இருந்து, இந்திய மக்களை ஆரோக்கியம் நிறைந்த தின்பண்டங்களை நோக்கித் திருப்புவதே அஹானாவின் இலக்காகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |