கணவர், 3 வயது மகனை கத்தியால் குத்திக்கொன்ற பெண்: அளித்த திடுக்கிடும் வாக்குமூலம்
Woman statement who stabbing husband son in usa: அமெரிக்காவில் கணவர் மற்றும் மகனை கத்தியால் குத்திக்கொன்ற பெண் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தனது கணவர் மற்றும் மூன்று வயது மகனை, கத்தியால் குத்திக்கொன்ற பெண் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள போகோனோ மலைப்பகுதியில் Great Wolf Lodge என்ற இடத்தில், மெட்டாலிகா ரோஸ் ஹாரிசன் என்ற 27 வயது பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
அதே சமயம் அவரது கணவர் சார்லஸ் ஹாரிசன் மற்றும் மூன்று வயது மகன் ஆகிய இருவரும், ஹொட்டல் அறையில் இறந்த நிலையில் படுக்கையில் கிடந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குளியலறைத் தரையில் ஒரு பெரிய கத்தியையும், சிங்க் பகுதியில் ஒரு சிறிய கத்தியையும் கண்டெடுத்தனர்.
பின்னர் தனது கணவர் மற்றும் மகனை கொன்றதாக மெட்டாலிகா கைது செய்யப்பட்டார். அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதும் தெரிய வந்தது.
மேலும், அந்த கத்திகள் ஹொட்டலுக்கு சொந்தமானவை அல்ல என்று நிர்வாகம் காவல்துறையிடம் தெரிவித்தது. இந்த நிலையில், மெட்டாலிகா ரோஸ் ஹாரிசன் அவசர மருத்துவக் குழுவினரிடம் திடுக்கிடும் வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்.
சிறுவயது முதலே கனவு கண்டேன்
அவரை வாக்குமூலத்தில், "நான் இங்கே இருக்க வேண்டியவள் அல்ல; ஒவ்வொரு நாளும் நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். சிறந்த மனிதராக, சிறந்த தாயாக, சிறந்த மனைவியாக இருக்க முயற்சிக்கிறேன். இது இப்படி முடிந்திருக்கக் கூடாது. எனக்கு ஒரு மகிழ்ச்சியான குடும்பம் அமைந்திருக்க வேண்டும். சிறுவயது முதலே நான் அதைத்தான் கனவு கண்டேன்" எனக் கூறியிருக்கிறார்.
அத்துடன் என் கணவரும், மகனும் வரவேற்பறையில் உள்ள படுக்கையில் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்; அவர்கள் போய்விட்டார்கள், என்னை மன்னிக்கவும் என்று தொலைபேசி அழைப்பை ஏற்பவரிடம் கூறிய பிறகு, தானும் அவர்களுடன் இணைய விரும்புவதாக ஹாரிசன் கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மெட்டாலிகா மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் தனது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
