விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்...
விமானத்தில் க இளம்பெண் ஒருவர் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக செய்த செயலல்ல பரபரப்பு ஏற்பட்டது.
"அல்லாஹு அக்பர்.., அனைவரும் சக தயாரா" என சக பயணிகளை அச்சுறுத்தினார்.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் தனது ஆடைகளை கழற்றியபடி "சாக தயாரா" என கத்திக்கொண்டே ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பெண் கைது செய்யப்படுவதற்காக விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன், விமானத்தில் இருந்த 3 குழந்தைகளின் தந்தை ஒருவர் அப்பெண்ணை மடக்கிப்பிடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
Credit: Getty
சைப்ரஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்த Jet2 விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. அப்பெண் திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை கழற்றிவிட்டு, விமானத்தின் காக்பிட் வரை 'அல்லாஹு அக்பர்' என கத்திக்கொண்டே இரண்டு முறை ஓடியுள்ளார்.
விமானத்தில் இருந் சிறுவர்களை பார்த்து இறப்பதற்கு தயாராக இருக்கிறீர்களா, விமானம் வெடிக்கப்பபோகிறது என்று கூறி அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.
30 வயது மதிக்கத்தக்க அப்பெண், தனது பெற்றோர் பிரபலமான ISIS பயங்கரவாத மைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். பின்னர் ஒரு கட்டத்தில் அப்பெண் தனது உள்ளாடையை முழுவதுமாக கழற்றியுள்ளார்.
Credit: TikTok/@ozzzyp
அப்போது, அதே விமானத்தில் தனது மனைவி, 3 பிள்ளைகள் என 6 பேராக பயணம் செய்துகொண்டிருந்த Phillip O’Brien எனும் 35 வயது நபர், விமான பணியாளர்களைப் பார்த்து, ஏன் யாரும் அப்பெண்ணை கட்டுப்படுத்தவில்லை? என்று கேட்டுள்ளார்.
விமான குழுவினர் தங்களால் அவரை கட்டுப்படுத்தமுடியவில்லை என கூறியபோது, "சரி நான் செய்கிறேன்" என்று கூறி முன்னேறினார்.
தனது இளம் வயதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப், அப்பெண்ணை தரையில் தள்ளி, கட்டுப்படுத்தினார்.
ஏன் இப்படி பயமுறுத்தும் விஷயங்களைச் சொல்கிறாய் என்று பிலிப் அப்பெண்ணிடம் கேட்டபோது, 'நான் இப்படி செய்யவில்லை என்றால் ஒரு வெடிப்பு ஏற்பட்டு எல்லோரும் இறந்துவிடுவார்கள்' என்று சந்தேகிக்கும்படி பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமானம் பாரிஸில் அவசரமாக தரையிறக்கப்பட்டது மற்றும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கியதும் அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.
விமானம் சிறிது நேரத்தில் மீண்டும் பயணிகளைக் ஏற்றிக்கொண்டு மான்செஸ்டருக்கு சென்றது.