இங்கிலாந்தில் பெண்ணொருவர் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாக எழுந்த சந்தேகம்: சமீபத்திய தகவல்
இங்கிலாந்தின் பரபரப்பான சந்தைவெளி ஒன்றில், பெண்ணொருவர் பை ஒன்றுடன் மக்களை அணுக, சிறிது நேரத்தில் பலருக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம்.
அது ரசாயனத் தாக்குதலாக இருக்கலாம் என கருதப்பட்டது.
பை ஒன்றுடன் மக்களை அணுகிய மர்மப் பெண்
கடந்த வாரம், இங்கிலாந்திலுள்ள Bath என்னும் நகரில் அமைந்துள்ள Stall Street என்னும் தெருவில், பெண்ணொருவர் கையில் பை ஒன்றுடன் அங்கிருந்தவர்களை அணுகியுள்ளார்.
சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, உடனே அங்கு ஏராளமான ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவ உதவிக்குழுவினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டனர். உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், இரண்டு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சமீபத்திய தகவல்
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 73 வயது பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவிய நிலையில், விசாரணையில், அவர் வேண்டுமென்றே யாரையும் பாதிப்பதற்காக எதையும் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆகவே, அவர் தற்போது காவலிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே மூன்று குழந்தைகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், தவறான தகவல்களால் பிரித்தானியாவின் பல பகுதிகள் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அந்தப் பெண் வைத்திருந்த ரசாயனம் என்ன, எதற்காக அவர் அதை பையில் வைத்திருந்தார் என்பது போன்ற விவரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |