பல் துலக்கும்போது 20 செமீ நீளமுள்ள Toothbrush-யை விழுங்கிய பெண்
பெண் ஒருவர் பல் துலக்கும்போது எதிர்பாராத விதாமாக 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை (Toothbrush) விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Toothbrush-யை விழுங்கிய பெண்
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, புனேவை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் பல் துலக்கும்போது எதிர்பாராத விதாமாக 20 செமீ நீளமுள்ள டூத் பிரஷை (Toothbrush) விழுங்கியுள்ளார்.
பின்னர், அந்த பெண் டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பெண்ணிற்கு எந்தவொரு காயமும் ஏற்படாமல் வயிற்றில் இருந்து வெற்றிகரமாக மருத்துவர்கள் டூத் பிரஷை அகற்றினர். அப்பெண்ணின் உயிருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
இது மாதிரி டூத் பிரஷை விழுங்குவது உலகளவில் 30 சதவீதத்திற்கும் குறைவானோர் தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தான் பெரும்பாலானோர் என்று கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |