கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
கொல்லப்பட்டதாக நினைத்த பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உயிருடன் வந்த பெண்
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டில் காணாமல் போனார்.
இதையடுத்து, தனது பெண்ணை கணவர் வீட்டார் வரதட்சணைக்காக கொலை செய்துவிட்டு மறைத்து வைத்திருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.
அதன்படி விசாரணை செய்த நீதிமன்றம் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அசோக் குமார் கூறுகையில், "திருமணமான ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெண் காணாமல் போனதால் கணவர், மாமியர் உட்பட 7 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கை உத்தர பிரதேச கண்காணிப்பு குழு விசாரித்தபோது காணாமல் போன பெண் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.
மேலும், இத்தனை காலங்கள் குடும்பத்தை பார்க்க வராததற்கு காரணம் என்ன என்பதையும் அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |