ஒரு காபி கொண்டு வர இவ்வளவு நேரமா? ஆத்திரத்தில் அமெரிக்க பெண் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் காபி கொண்டுவர தாமதமானதால் கடைகளில் உள்ள பொருள்களை எல்லாம் தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உணவு சாப்பிட ஹோட்டலுக்கு செல்லும் பொழுது சில சமையங்களில் உணவு வருவதற்கு சிறுது தாமதம் ஆகும். இதனால் பசியில் காத்து கொண்டிருப்பவர்கள் கோபப்படுவது வழக்கமான ஒன்று.
இதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆர்கான்சஸ் மாகாணத்தில் உள்ள மெக்டொனால்டில் காபி குடிக்க சென்ற பெண் கோபப்பட்டு கடைகளில் உள்ள பொருள்களை கண்டபடி வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது அந்த பெண் ஒரு காபி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் காபி வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த பெண் கோபத்தில் அங்கு பணிபுரியும் பெண்களை செய்யும் தொழில்களில் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளார்.
Karen Trashes McDonald’s because Her Coffee Took too Long pic.twitter.com/qi0V0MG2mk
— Karen (@crazykarens) October 4, 2021
மேலும் அந்த பெண் டேபிள் மேலே இருந்த பொருட்களை கீழே தள்ளி கையில் கிடைப்பதை தூக்கி எறிந்துள்ளார்.
இதையடுத்து ஹோட்டல் நிர்வாகம் பொலிஸ் புகார் கொடுப்பதாக மிரட்டியவுடன் தான் ஒரு நீரிழிவு நோயாளி. சர்க்கரை அளவு குறைவாக இருப்பதாக அந்த பெண்மணி கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.