19 வயதில் CA தேர்வில் முதலிடம் பிடித்த பெண்.., உலகின் இளைய பட்டய கணக்காளராக சாதனை
உலகின் இளைய பட்டய கணக்காளரான நந்தினி அகர்வால் தனது 19 வயதில் CA இறுதித் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
CA இறுதித் தேர்வில் முதலிடம்
இந்திய மாநிலமான,மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவைச் சேர்ந்தவர் நந்தினி அகர்வால். இவர் உலகின் இளைய பெண் பட்டயக் கணக்காளர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
2001 ஒக்டோபர் 18-ம் திகதி அன்று பிறந்த இவர் 2021 ஆம் ஆண்டு CA இறுதி தேர்வில் 19 வயது, 8 மாதங்கள் மற்றும் 18 நாட்களில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தார்.
அப்போது 800க்கு 614 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார். பின்னர் இவரது சாதனை நவம்பர் 29, 2021 அன்று India Book of Records-ஆல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவர் உலகின் இளைய பெண் CA ஆனார்.
இந்த சாதனைக்காக இவர் 13 வயதில் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளைத் தேர்ந்தெடுத்து 15 வயதிற்குள் 12 ஆம் வகுப்பை முடித்தார். மேலும், விக்டர் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைப் படித்தார்.
பின்னர் தனது 19 வயதில் ஜூலை 2021 அன்று தனது CA இறுதித் தேர்வுகளை எழுதினார். அடுத்து, செப்டம்பர் 13, 2021 அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு வயது 19 வயது 330 நாட்கள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |