பிரித்தானியாவில் பெண்ணுக்கு குதிரை கொடுத்த அதிர்ச்சி: வைரலான வீடியோ
லண்டனுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள், மன்னருடைய பாதுகாவலர்களின் குதிரைகள் அணிவகுக்கும் Horse Guards Parade என்னுமிடத்தைத் தவறவிடுவதில்லை. அப்படி அந்த இடத்துக்குச் சென்ற ஒரு பெண்ணுக்கு வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
குதிரையுடன் போஸ் கொடுக்க முயன்ற பெண்
மன்னருடைய பாதுகாவலர்களுடன் போஸ் கொடுக்கும்போது நிகழும் சம்பவங்கள் பல வைரலாகியுள்ளன. புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட ஒரு ஆட்டிஸக் குறைபாடு கொண்ட நபர், தயங்கியபடி ஒரு பாதுகாவலர் நிற்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி போஸ் கொடுக்க, புகைப்படம் எடுப்பவர் சரியாக புகைப்படம் எடுக்கும்போது, சட்டென அந்த நபரின் அருகே நின்று போஸ் கொடுத்துவிட்டு உடனடியாக விலகிய ஒரு பாதுகாவலரைக் காட்டும் வீடியோ ஏற்கனவே வைரலாகியுள்ளது.
I know I shouldn’t laugh ? pic.twitter.com/tcqKNFZs6P
— Darren Grimes (@darrengrimes_) May 21, 2024
இம்முறை, சற்று எதிர்மறையான ஒரு நிகழ்வு வைரலாகியுள்ளது. ஆம், மன்னருடைய பாதுகாவலரின் குதிரைக்கு அருகே நின்று போஸ் கொடுக்க முயன்ற ஒரு பெண் குதிரையின் கழுத்தைத் தொட, சட்டென அவர் எதிர்பாராத நேரத்தில் அவரை ஒரு கடி கடித்தது அந்தக் குதிரை.
திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழப்போக, புகைப்படம் எடுக்க முயன்ற அவரது உறவினர் ஓடோடி வந்து அவருக்கு ஆறுதல் கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லும் ஒரு காட்சி வைரலாகியுள்ளது. அவர், காலத்துக்கும் இந்த சம்பவத்தை மறக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.
நடந்த சம்பவத்தால் அந்த பெண் மட்டுமின்றி, அங்கு நின்ற மற்றவர்களும் அதிர்ச்சியடைய, அந்த குதிரையில் உட்கார்ந்திருந்த பாதுகாவலர் மட்டும், ‘கருமமே கண்ணாயினாராக’ அசையாமல் உட்கார்ந்திருந்ததையும் வீடியோவில் காணலாம். விடயம் என்னவென்றால், அந்த குதிரைகள், மற்றவர்களால் தொடப்படுவதை விரும்புவதில்லையாம். சொல்லப்போனால், குதிரைகளைத் தொடவேண்டாம் என ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளும் உள்ளன என்கிறார்கள் அந்த இடத்துக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |