கழிப்பறை பயன்படுத்த அனுமதிக்கவில்லை; விமானத்தின் தரையில் சிறுநீர் கழித்த பெண்
கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்பதால் பெண் பயணி ஒருவர் விமானத்தின் தரையில் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானத்தின் தரையில் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊழியர்கள் கழிவறையை பயன்படுத்த மறுத்ததையடுத்து பயணி இதனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Spirit
ஆன்லைனில் வெளிவந்த ஒரு சிறிய வீடியோவில், அடையாளம் தெரியாத பெண் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தின் தரையில் குனிந்துகொண்டு, தன்னால் இனி தாங்க முடியாது என்பதால் கழிவறைக்குச் செல்வது குறித்து பணியாளர்களுடன் வாதிடுவதைக் காணலாம்.
கருப்பு மற்றும் மஞ்சள் நிற ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் சீருடையில் இருந்த ஒரு விமானப் பணிப்பெண், அந்தப் பெண் சண்டையிடுவதையும் இறுதியில் விமானத்தின் மூலையில் சிறுநீர் கழிப்பதையும் படம் பிடித்தார்.
?? ÉCART CIVILISATIONNEL : 20/07/2023 Une Afro-américaine à bord d'un vol @SpiritAirlines urine sur le sol parce qu'elle ne veut pas attendre qu'ils ouvrent les toilettes après le décollage. Les hôtesses de l'air, quant à elles, lui disent qu'elle devrait boire de l'eau "parce… pic.twitter.com/EQbPGy0NFK
— Valeurs Occidentales (@ValOccidentales) July 21, 2023
"எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும். இப்போது இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. முடியாவிட்டால் என்னிடம் சொல்லுங்கள்" என்று அந்த பெண் விமானப் பணிப்பெண்ணிடம் கூறுவதை வீடியோவில் காணலாம்.
இந்த சம்பவம் குறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒரு பெண் பயணிக்கு கழிவறைக்கு அனுமதி மறுக்கப்பட்டு தரையில் சிறுநீர் கழிப்பது இது முதல் முறையல்ல. 2018-ஆம் ஆண்டில், Wizz Air விமானத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Woman Urinates On Plane's Floor, Airline Didn't allow to Use Washroom, couldn't hold it anymore, Spirit Airlines Video