கணவருடன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய பெண்... உதவிய மருத்துவர் வழக்கு: நீதிமன்றத்தின் முடிவு
கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட பெரும் செல்வந்தரான சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், தன் கணவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் ஒரு 86 வயதுப் பெண்.
ஆனால், அவருக்கு உதவிய மருத்துவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
கணவருடன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய பெண்...
2017ஆம் ஆண்டு, கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிய நிலையில், அவருடன் தானும் தன் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் அவரது மனைவி.
Pierre Beck என்னும் மருத்துவர், அந்தப் பெண் தன் வாழ்வை முடித்துக்கொள்வதற்கு உதவினார். அவர் அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து ஒன்றை அதிக அளவில் கொடுக்க, அந்தப் பெண் உயிரிழந்தார்.
ஆனால், 2019ஆம் ஆண்டு, Pierre Beck, மருந்துகள் தொடர்பிலான பெடரல் சட்டத்தை மீறியதாக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவருக்கு 120 நாட்கள் சிறை (suspended jail sentence) தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் Pierre Beckக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க, அரசு சட்டத்தரணிகள் வழக்கை பெடரல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்கள். வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று விசாரித்த நிலையில், அவர்களில் நான்கு நீதிபதிகள் அந்தப் பெண்ணின் மரணம் சட்டப்படியானதே என தீர்ப்பளித்து, Pierre Beckஐ வழக்கிலிருந்து விடுவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |