அலறல் சத்தம் மட்டுமே கேட்டது... லண்டன் பெண்ணின் கொடூர மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்
பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் வளர்ப்பு நாய்க்களால் தாக்குதலுக்கு இலக்காக மரணமடைந்த பெண் தொடர்பில் நேரில் பார்த்தவர்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர்.
அலறல் சத்தம் மட்டுமே கேட்டது
தாக்குதலுக்கு இலக்கான அந்த 28 வயது பெண், நாய்களுடன் போராடும் போதும், பார்வையாளர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளார். இதில், சம்பவத்தை நேரில் பார்த்து பீதியில் உறைந்துபோன ஒருவர் தெரிவிக்கையில், நாய்கள் குரைக்கும் சத்தமே கேட்கவில்லை, ஆனால் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது என்கிறார்.
@LNP
அந்த பெண்ணை சூழ்ந்து கொண்ட நாய்கள், அவரை வெறிகொண்டு தாக்கியதாகவும், அவரால் தப்பிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தீவிரமாக போராடியும், தங்களால் காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த அந்த பெண்
இந்த நிலையில், பொலிசார் 8 நாய்களை பிடித்துள்ளதுடன், காப்பகத்திலும் ஒப்படைத்துள்ளனர். லண்டனை சேர்ந்த அந்த பெண், சர்ரே பகுதியில் உள்ள பூங்காவில் நாய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பகுதியில், தாக்குதலில் ஈடுபட்ட நாய்களுடன் சென்றுள்ளார்.
Credit: UkNewsinPictures
அதில் ஒரு நாய் அங்கிருந்த பெண் ஒருவரை தாக்கியதாகவும், அதன் பின்னரே இவர் மீது ஒவ்வொன்றாக பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
நாய்களால் தாக்கப்பட்டு குற்றுயிராக கிடந்த அவரது நிலை நீண்ட காலத்திற்கு மறக்கவே முடியாது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.