இரவில் பெண்ணை அரைநிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தல்!
இரவு முழுவதும் பெண்ணை அரைநிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை துன்புறுத்தல்
இந்திய மாநிலம் ஜார்கண்டில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள 26 வயது பெண்ணிற்கு தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த பெண், ஒரு நபருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பெண்ணுடன் தகாத உறவு வாய்த்த நபர் மற்றும் மேலும் 3 பேர் சேர்ந்து பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும், ஆடைகளை கிழித்து அரைநிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிசார் விசாரணை
இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு, அடித்து துன்புறுத்திய 4 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்," நான் வீட்டிற்கு வந்ததும் எனக்கு போன் செய்து வெளியில் வரும்படி கூறினர். பின்பு, நான் வெளியில் வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்னை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று ஆளில்லாத இடத்தில் வைத்து மரத்தில் கட்டி அடித்தனர். மேலும், ஆடைகளை கிழித்து எறிந்தனர்" என்றார்.
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்தி வந்து கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்ற நிலையில், இத்தகையை கொடூர சம்பவம் பெண்களுக்கு நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |