ரூ 20 லட்சம் மதிப்பிலான ஷூ... பல கோடிகள் பெறுமதிகொண்ட குடியிருப்பு: யாரிந்த நமிதா
Shark Tank India நிகழ்ச்சியின் நடுவராக பிரபலமடைந்துள்ள Namita Thapar மிகவும் வெற்றிகரமான தொழிலதிபராகவும் அடையாளம் கண்டுள்ளார்.
வாழ்க்கையை முழுமையாக வாழும்
Thapar Entrepreneur Academy என்ற நிறுவனத்தின் நிறுவனரான நமிதா, அவரது வாழ்க்கை மற்றும் வணிகத்தை தைரியமாக முன்னெடுப்பதன் மூலம் பலருக்கு உண்மையிலேயே ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார்.
மட்டுமின்றி, பல்வேறு சிறப்புமிக்க அமைப்புகளிலும் அவர் உறுப்பினராக உள்ளார். டியூக் பல்கலைக்கழகத்தின் ஃபுகுவா ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர். ICAI இலிருந்து பட்டய கணக்காளர் பட்டம் பெற்றார்.
அமெரிக்காவில் உள்ள Guidant Corporation நிறுவனத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் Emcure Pharmaceuticals நிறுவனத்தில் CFO பொறுப்பில் இணைந்தவர், பின்னர் நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.
பெரும் பணக்காரர்கள் வரிசையில் நமிதாவும் கருதப்படுகிறார், மட்டுமின்றி தமது வாழ்க்கையை முழுமையாக வாழும் குறிப்பிட்ட சில செல்வந்தர்களில் நமிதாவும் ஒருவர்.
70 மணி நேர வேலை
வெளியான தரவுகளின் அடிப்படையில் நமிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ 600 கோடி என்றே தெரிய வந்துள்ளது. புனே நகரில் சுமார் 50 கோடி மதிப்பிலான குடியிருப்பில் நமிதா வசித்து வருகிறார்.
ரூ 20 லட்சம் மதிப்பிலான ஷூ அணிந்து கொள்ளும் நமிதாவிடம் BMW X7, Mercedes-Benz GLE, மற்றும் Audi Q7 ஆகிய கார்கள் உள்ளன. வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க இளைஞர்கள் தயாராக வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நமிதா,
ஒரு நிறுவனத்தின் உரிமையாளருக்கு வேண்டுமானால் அத்தகைய 70 மணி நேர வேலை என்பது பொருந்தலாம், ஆனால் அப்படியான ஒரு தலையெழுத்து இல்லாதவர்களுக்கு அது சாத்தியமற்றது என்றார்.
வாரத்திற்கு 140 மணி நேரம் வேண்டுமானாலும் உழைத்துக் கொள்ளுங்கள் ஆனால், கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வதோ பிள்ளை பெற்றுக்கொள்வதோ வேண்டாம், ஏனென்றால் அவர்களுக்கும் நாம் நேரம் ஒதுக்க வேண்டும் என வெளிப்படையாக தமது கருத்தை நமிதா பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |